பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா மற்றும் நபிகள் நாயக மான்மிய மஞ்சரி
நூல் வெளியீட்டுவிழா
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில்
சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழா மற்றும் சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர்
எழுதியுள்ள நபிகள் நாயக மான்மிய மஞ்சரி நூல்
வெளியீட்டுவிழா 4.8.2015 அன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.
தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார்.
கல்லூரித் தாளாளர்
அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி தலைமையுரையாற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர்
மு.முகமது சாதிக் வாழ்த்துரை வழங்கினார். சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் எழுதி,
வரலாற்றறிஞர் செ. திவான் பதிப்பித்துள்ள நபிகள் நாயக மான்மிய மஞ்சரி எனும் நூலை
கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி வெளியிட சென்னை உயர்நீதிமன்ற
மேனாள் நீதியரசர் டேவிட் கிறிஸ்டியான் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டு
வாழ்த்துரை ஆற்றினார்.
நீதியரசரின் வாழ்த்துரை
அவர் தன் வாழ்த்துரையில் “ இஸ்லாமிய
இலக்கியங்களை இளையதலைமுறையினரிடம் கொண்டுசெல்லும் சீதக்காதி தமிழ்ப் பேரவையின்
பணிகளைப் பாராட்டுவதாகவும், 92 அரியநூல்களை எழுதியுள்ள வரலாற்றறிஞர் செ.திவானின்
நூல்கள் புதியநோக்கில் வரலாற்றினைத் தருவதாகவும் தெரிவித்து,அவருடைய ஔரங்கசீப்
தொடர்பான வரலாற்று நூல் பல புதிய உண்மைகளைத் தந்ததாகவும் குறிபிட்டு நபிகள் நாயக
மான்மிய மஞ்சரி எளியநடையில் அமைந்த அழகான நூல்,தொடர்ந்து நல்ல நூல்களை வெளியிடும்
சீதக்காதி தமிழ்ப் பேரவைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று
பேசினார்.
விழாவில் தமிழ்அறிஞர் வீ.செந்தில் நாயகம் ‘மனிதம் வளர்த்த தமிழ்’ என்ற
பொருளில் சிறப்புரையாற்றினார்.
ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அல்ஹாஜ் கே.ஏ.மீரான்
மைதீன்,அல்ஹாஜ் எம்.கே.எம். முகமது நாசர்,முன்னாள் முதல்வர்கள் பேராசிரியர் முகமது
பாசி, பேராசிரியர் கா.முகமது பாருக்,மேனாள் வணிகவியல் துறைப் பேராசிரியர் கலீலூர்
ரகுமான்,மேனாள் வனத்துறை அலுவலர் சேக் முகைதீன்,எழுத்தாளர்
நாறும்பூநாதன்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மருத்துவஅலுவலர் டாக்டர்
அய்யனார்,தமிழ்முழக்கப் பேரவைப் பொறுப்பாளர் ஆவுடையப்பன்,நல்லாசிரியர் ராமசாமி
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் அ.மு.அயூப்கான்
நன்றிகூறினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைக் கல்லூரித் தமிழ்த்துறை செய்திருந்தது.
படத்தில்: பாளை. சதக்கத்துல்லாஹ் அப்பா
கல்லூரியின் சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்கவிழாவில், வரலாற்றறிஞர் செ. திவான்
பதிப்பித்துள்ள நபிகள் நாயக மான்மிய மஞ்சரி எனும் நூலை கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ்
த.இ.செ.பத்ஹூர் ரப்பானி வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதியரசர் டேவிட்
கிறிஸ்டியான் அதன் முதல் பிரதியைப் பெற்றுக்கொள்கிறார்.