சனி, 9 மார்ச், 2013

தமிழ் முழக்க ப் பேரவை த் தொடக்க விழா திருநெல்வேலி






தமிதிருநெல்வேலி : நெல்லையில், தமிழ் முழக்கப் பேரவை துவக்க விழா நடந்தது. திருநெல்வேலியில், தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, "தமிழ் முழக்கப் பேரவை' இலக்கிய அமைப்பின், துவக்க விழா நடந்தது. தமிழ் முழக்கப் பேரவையை, காங்., முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார், துவக்கி வைத்து பேசியதாவது: நான், தமிழின் சுவையை குமரிஅனந்தன், நெல்லை கண்ணன் ஆகியோரின் உரைகளில் பருகியுள்ளேன். சடையப்ப வள்ளல், தமிழறிஞர்களுக்கு உதவி புரிந்துள்ளதை படித்துள்ளேன். வணிகம் மூலம், பொருள் ஈட்டும் நானும், தமிழ் மொழிக்காக என் பங்களிப்பை செய்து வருகிறேன். நெல்லையில் துவக்கப்பட்டுள்ள தமிழ் முழக்கப் பேரவையின் மூலம், தமிழை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். "வெற்றிப் படிக்கட்டு' என்னும், சுயமுன்னேற்ற நூல் எழுதியுள்ள, முன்னாள் எம்.எல்.ஏ.,வசந்த குமாரை,பாராட்டி சால்வை அணிவித்தனர். நிகழ்ச்சியில், உலக திருக்குறள் மைய தலைவர் வளன்அரசு, கம்பன் இலக்கிய கழக தலைவர் சடகோபன், முன்னாள் பதிவாளர் சிதம்பர பாண்டியன், செந்தில் நாயகம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் மகாதேவன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர் திவான், தமிழ்சங்க பிரமுகர் காஜா மைதீன், மித்ரா வள்ளி மணாளன், ராஜகோபால், தியாகி விஸ்வநாத தாஸ் தேசிய பேரவை தலைவர் முத்துராஜ், பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய் ராமசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். எழுத்தாளர் காமராஜ், நன்றி கூறினார். வண்ணார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஐ.என்.டி.யூ.சி., மாநில செயலர் ஆவுடையப்பன், தலைமை வகித்தார். செயலர் சுடலைமுத்து, கவுன்சிலர் உமாபதி சிவன், முன்னிலை வகித்தனர். தமிழ் முழக்கப் பேரவை அமைப்பாளர், நல்லாசிரியர் செல்லப்பா அறிமுக உரையில், தமிழுக்கு, திருநெல்வேலியில் பிறந்தவர்களின் பங்களிப்பு குறித்தும், தமிழ் முழக்கப் பேரவையின் தேவை குறித்தும் பேசினார்.ழ் முழக்கப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக