ஞாயிறு, 31 மார்ச், 2013

”மேலும்”இலக்கிய விமர்சன விருது -2013



”மேலும்”இலக்கிய விமர்சன விருது -2013
தமிழ் இலக்கிய விமர்சனம்,படைப்புப் போல் பொதுமையும்,ஆழமும் கொண்டது. தமிழ் இலக்கிய விமர்சனத் துறையில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு ஜுன் 29அன்று
”மேலும்”இலக்கிய விமர்சன விருது -2013 ,25000 ரூ வழங்கபடும்.
திரு.சிவசு,9,ரயில் நிலைய சாலை,
பாளை -627002
9443717804

சனி, 30 மார்ச், 2013

மேலும் வெளியீட்டகம் நடத்தும் பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும்








 ம .தி .தா .இந்துக் கல்லுரி த் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களுக்குப் பணி நிறைவுப் பாராட் டு விழா நெல்லை ஜானகி ராம் உணவகம் நாள் :29.3.13 மாலை 5மணி

திங்கள், 25 மார்ச், 2013

kalyanji facebook kavithaikal

அன்பு அய்யா வணக்கம் .
நிரம்பிய பாத்திரத் திற்கு ஏற்பத் தன்னை நீட்டிக் கொள் ள க் கூடிய தண்ணிமை எங்கும் .இயல்பற்ற மனிதர்களையும் ,.இயல்பற்ற இலக்கியங்களையும் பார்த்துக் கொண்டிருகிறோம் .இதற்கு மாற்று தங்கள் கவிதைகள் .முகநூல் பக்கங்களிலும் இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கி றீர்கள் .நினைவு நாடாக்களில் நீள்கின்றன நம் பழைய ..நினைவு கள் .சில கவிதைகள் அழகியல் சித்திரங்கள் ,சில கவிதைகள் நடைமுறை ப் பதிவுகள் ,முக நூல் பரப்பில் தாங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று வேண்டுகிறோம் .
                                                                                                      சௌந்தர மகாதேவன் 

ஞாயிறு, 24 மார்ச், 2013

மலேசியாவில் 12வது உலகத் தமிழ் இணைய மாநாடு


Inaiya-Manadu-Group-Feature
கோலாலம்பூர், மார்ச் 24 – உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்) அமைப்பு, 12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாட்டை மலேசியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான மலாயாப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்துகிறது.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் மொழி மொழியியல் புலம், தகவல் தொழில்நுட்ப நடுவம் ஆகியவற்றுடன் இணைந்து திதியான் டிஜிட்டல் திட்டத்தின் ஆதரவுடனும் இம்மாநாடு நடைபெறுகிறது.
இந்த தகவல்கள் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 22ஆம் தேதி மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
கணினி, இணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கும் தமிழர்களிடையே பரவும் வகையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தமம் அமைப்பு உலகத்தமிழ் மாநாடுகளை நடத்தி வருகிறது.
உத்தமம் உலகத்தமிழர்களை இணையத்தின் வாயிலாக இணைப்பதில் வெற்றி கண்டுள்ளது.
இதுவரை உலகளாவிய எட்டு மாநாடுகள்
இது வரை எட்டு மாநாடுகளை அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளில் முன்னணிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும், தமிழகத்தில் மூன்று மாநாடுகளை தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தமம் நடத்தியிருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த ஆண்டு கோலாலம்பூரில் உள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மேலாண்மை கண்காணிப்பு நடுவத்தில், வரும் ஆகஸ்டு 15 முதல் 18 வரை  “12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு 2013”ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.
உத்தமத்தின் தலைவர் சி. ம. இளந்தமிழ் (படம்) அவர்கள், மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார். உத்தமம் அமைப்பின் முன்னாள் தலைவர் திரு மணி மு. மணிவண்ணன் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மலேசிய மாநாட்டின் சிறப்பு அம்சங்கள்
முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2013 மாநாடும் கருத்தரங்கு, கண்காட்சி, மக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும்.
ஆய்வுக் கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகஸ்டு 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் நடக்கவிருக்கிறது. கண்காட்சியும் மக்கள் கூடமும் ஆகஸ்டு 16, 17, 18 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும்.
மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம். கண்காட்சியிலும் மக்கள்கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.
கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணிணித் தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
மாநாட்டின் கருத்தரங்கக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்திரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன், கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் இக்குழு வகிக்கும்.
“கையடக்கக் கணினிகளில் தமிழ்”
இவ்வாண்டின் கருத்தரங்கிற்கு “கையடக்கக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக்கட்டுரைகளை ஏற்பாட்டுக் குழுவினர் வரவேற்கின்றார்கள்.
இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல், பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல், கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறு முறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை மாநாட்டுக்குழுவினர் எடுக்கவிருக்கின்றனர்.
கடந்த ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் கணினித் தமிழ்ச் சங்கம் கண்காட்சி அரங்கம் ஏற்பாடுகளில் பெரும்பங்கு வகிக்கும்.
கட்டுரைகளுக்கான தலைப்புகள்
கீழ்க் காணும் தலைப்புகளில் கட்டுரைகளை ஏற்பாட்டுக் குழுவினர் வரவேற்கின்றார்கள்:-
* செல்பேசிகள் மற்றும்  கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
* மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர  உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
* ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயல்கள் (Apps).
* திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
* இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி, தமிழ் எழுத்துருபகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
* தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
*தமிழ் தரவுத் தளங்கள்.
*கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
*தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
*கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.
 கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும்.
இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் (HTML) வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் (Microsoft word) அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம்.
பி.டி.எஃப் (PDF) அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம்.
தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
மாநாட்டு இதழ் ஒன்று அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும்.
 ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.
(4 பக்க அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கட்டுரையாளர்கள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
 கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். கட்டுரைச் சுருக்கங்ள் அனுப்ப இறுதி நாள் 31 மே 2013 ஆகும்.
தமிழ் குறுஞ்செயலி உலகப் போட்டி:
கையடக்கக் கணினிகளின் தொழில்நுட்பம் வளர்ந்து கொடுப்பதற்கு ஈடாகத் தமிழிலும் குறுஞ்செயலிகள் (Apps)  வளர வேண்டும் என்பதை உணர்ந்தும் மேலும் பல நிரலாளர்களைத் (programmers) கணினித்தமிழுக்கு ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழுக்கான சிறந்த குறுஞ்செயலிப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம்.
ஆப்பிள் ஐ-ஓஎஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் 8 தளங்களுக்கான  குறுஞ்செயலிகள் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியைப் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு உத்தமத்தின் வலைத்தளம்  ti2013.infitt.org அணுகவும்.
மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் தொடர்பு கொள்ளவும்: ed@infitt.org மற்றும் chair@infitt.org
இந்த உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கான செயலகம் கீழ்க்காணும் முகவரியில் செயல்படும்:-
 No 48A, First Floor
Jalan 1/19, Seksyen 1
PJ Old Town
46050 Petaling Jaya
Selangor, Darul Ehsan

(படம்; பத்திரிக்கையாளர் சந்திப்பில் மாநாட்டுத் தலைவர், சி.ம.இளந்தமிழ், மற்றும் ஏற்பாட்டுக் குழுவினருடன் செல்லியல் மற்றும்  செல்லினம், வடிவமைப்பாளர்  முத்து நெடுமாறன்)
Selliyal.com

மேலும் வெளியீட்டகம் நடத்தும் பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும்


மேலும் வெளியீட்டகம் நடத்தும்

பாராட்டும் படைப்பாளியுடன் சந்திப்பும் 29.3.2013,மாலை 5.00மணி

அயோத்யா அறை ,திருநெல்வேலி ஜானகிராம் உணவகம்



பணிநிறைவு ப் பாராட்டுப் பெறு பவர்கள்

முனைவர் ஆ .தனஜ்செயன் ,

நாட்டார் வழக்காற்றியல் துறைத் தலைவர்

தூய சவேரியார் கல்லூரி

முனைவர் வே .கட்டளை கைலாசம்

தமிழ்த் துறைத் தலைவர்

ம .தி .தா .இந்துக் கல்லூரி





பாராட்டுப் பேசு பவர்கள்

முனைவர்நா .இராமச்சந்திரன்

நாட்டார் வழக்காற்றியல்

தூய சவேரியார் கல்லூரி

முனைவர் ச .மகாதேவன்

தமிழ்த் துறைத் தலைவர்


சதக்க த் துல்லாஹ் அப்பா கல்லூரி





கவிதை வாசிப்பு



கல்யாண்ஜி



இலக்கியப் போக்குகள்



கவிஞர் சுகுமாரன்

திருவனந்தபுரம்



நிகழ்ச்சி த் தொகுப்பாளர்

முனைவர் நா .வேலம்மாள்

நிகழ்ச்சி அமைப்பு

திரு .சிவசு

வியாழன், 21 மார்ச், 2013

ம .தி .தா .இந்துக் கல்லுரி த் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களுக்குப் பணி நிறைவுப் பாராட் டு விழா நெல்லை ஜானகி ராம் உணவகம் நாள் :29.3.13 மாலை 5மணி





ம .தி .தா .இந்துக் கல்லுரி த் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களுக்குப் பணி நிறைவுப் பாராட் டு விழா நெல்லை ஜானகி ராம் உணவகம் நாள் :29.3.13 மாலை 5மணி நெல்லை ஜானகி ராம் உணவகம் நாள் :29.3.13 மாலை 5மணி

ஞாயிறு, 17 மார்ச், 2013

மகாகவி பாரதி

அக்கினிக் குஞ்சொன் று கண்டேன் -அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு -தழல்
வீரத்தில் குஞ்சென்று மூப்பென்று முண்டோ ?
தத்ததரி கிட தத்ததரி கிட தித்தோம்
                                                     மகாகவி பாரதி 

இலக்கிய செல்வர் திரு .குமரி அனந்தன்

.

சனி, 16 மார்ச், 2013

திரு .,தமிழிசை மம்முது

அந்த நாள் இசையோடு கழிந்தது .இன்டிகாவில் பயணித்தபடி தொடங்குகிறார் திரு .,தமிழிசை மம்முது .செய்துங்கநல்லூர் தாண்டுகிறது வண்டி .வான் நோக்கி எட்டத் துடிக்கும் மருத மரங்கள் ..பெண்கள் அரிசி புடைப்பர் ,அதற்குப் பெயர் தெள்ளுதல் தெரியுமா ?என்றார் .அப்போது பிறந்த இலக்கியம்தான் திருத் தெள் ளே னம் என்றார்.இசைக்கு அடிப்படை ஆனந்தம் .படுமலைப் பாலை என்ற பண் நடபைரவி என்று இன்று பாடப்பட்டு வருகிறது .விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் ,மயிலிற ஹாய் மயிலிற ஹாய் என்ற பாடல் அந்தப் பண் தான் என்றார் .காதல் உணர்வினை த் தரும் பண் அது என்றார்.பாலை நிலத்தின் பண் அரும் பாலை.சங்கராபரணம் எனும் பண் ணும் அதுதான் .நர்சரி பிள்ளைகள் பாடும் லண்டன் பிரிட்ஜ்  லண்டன் பிரிட்ஜ் எனும் பாடல் அந்தப் பண்தான் என்றார் .நெய்தல் திணைப் பாடல் தோடி எனும் பண் .கங்கைக் கரை மன்னனடி ,இசை கேட்க எழுந்தோடி எனும் பாடல் அந்தப் பண்தான் என்றார்.இசை மேதை இளையராஜா ,இசைப்புயல் ஏ .ஆர் .ரஹ்மான் என அத்தனை இசை ஆளுமைகளும் மதிக்கும் திரு .,தமிழிசை மம்முதுஉடன் காயல் பட்டினம் வாவு வாஜீஹா மகளிர் கல்லூரியில் சிறப்புரை ஆற்றிய 14.3.13நாள் மறக்க முடியாது .,தமிழிசை குறித்த  சிந்தனை  அலைகளை அந்த நாள் தந்து சென்றது .

ஞாயிறு, 10 மார்ச், 2013

பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன்இணையத் தளங்கள் மற்றும் வலைப் பூக்கள்

பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன்இணையத் தளங்கள் மற்றும் வலைப் பூக்கள் 

பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன்சென்னை ரோட்டரி சங்கத்தின் டாக்டர் ராதா கிருஷ்ணன் மாநில நல்லாசிரியர் விருது பெறு கிறார்

பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன்மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு .பி .வி .நரசிம் ம ராவ் அவர் களிடம் சத்பாவனா தேசிய விருது பெறுகிறார்

பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன்மாண்புமிகு  பாரதப் பிரதமர் திரு .பி .வி .நரசிம் ம ராவ் அவர் களிடம் சத்பாவனா தேசிய விருது பெறுகிறார் 

 

பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன்மாண்புமி கு தமிழக முதல்வர் டாக்டர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களிடம் எட்டாம் உலகத் தமிழ் மா நாட்டில் பெற்ற விருது

பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன்மாண்புமி கு தமிழக முதல்வர் டாக்டர் செல்வி ஜெ .ஜெயலலிதா அவர்களிடம் எட்டாம் உலகத் தமிழ் மா நாட்டில் பெற்ற விருது 

பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன் தன் விபரக் குறிப்பு





       பாளையம்கோட்டை, முனைவர் ச .மகாதேவன் தன் விபரக் குறிப்பு 

முனைவர் கட்டளை கைலாசம் அவர்களுக்குப் பணி நிறைவுப் பாராட் டு

ம .தி .தா .இந்துக் கல்லுரி த் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களுக்குப் பணி நிறைவுப் பாராட் டு விழா நெல்லை ஜானகி ராம் உணவகம் நாள் :29.3.13 மாலை 5மணி 

சனி, 9 மார்ச், 2013

தமிழ் முழக்க ப் பேரவை த் தொடக்க விழா 10.3.13 மாலை 4.30 மணிக்கு வசந்த் தொலைக்கட்சியில் ஒளி பரப்பாகும்





தமிழ் முழக்க ப் பேரவை த் தொடக்க விழா 10.3.13 மாலை 4.30 மணிக்கு வசந்த் தொலைக்கட்சியில் ஒளி பரப்பாகும் 

தமிழ் முழக்க ப் பேரவை சிறப்பு விருந்தினர் :திரு .வசந்தகுமார் வசந்த் தொலைக் காட்சி ,முனைவர் ச .மகாதேவன் ,முனைவர் பா .வளனரசு ,முனைவர் கு .சடகோபன் ,திரு .உ .சிதம்பரபண்டியன் ,திரு .p .ஆவுடையப்பன் ,நல் ஆசிரியர் சு .செல்லப்பா

தமிழ் முழக்க ப் பேரவை த் தொடக்க விழா திருநெல்வேலி






தமிதிருநெல்வேலி : நெல்லையில், தமிழ் முழக்கப் பேரவை துவக்க விழா நடந்தது. திருநெல்வேலியில், தமிழ் ஆர்வலர்களை ஒன்றிணைத்து, "தமிழ் முழக்கப் பேரவை' இலக்கிய அமைப்பின், துவக்க விழா நடந்தது. தமிழ் முழக்கப் பேரவையை, காங்., முன்னாள் எம்.எல்.ஏ., வசந்தகுமார், துவக்கி வைத்து பேசியதாவது: நான், தமிழின் சுவையை குமரிஅனந்தன், நெல்லை கண்ணன் ஆகியோரின் உரைகளில் பருகியுள்ளேன். சடையப்ப வள்ளல், தமிழறிஞர்களுக்கு உதவி புரிந்துள்ளதை படித்துள்ளேன். வணிகம் மூலம், பொருள் ஈட்டும் நானும், தமிழ் மொழிக்காக என் பங்களிப்பை செய்து வருகிறேன். நெல்லையில் துவக்கப்பட்டுள்ள தமிழ் முழக்கப் பேரவையின் மூலம், தமிழை வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். "வெற்றிப் படிக்கட்டு' என்னும், சுயமுன்னேற்ற நூல் எழுதியுள்ள, முன்னாள் எம்.எல்.ஏ.,வசந்த குமாரை,பாராட்டி சால்வை அணிவித்தனர். நிகழ்ச்சியில், உலக திருக்குறள் மைய தலைவர் வளன்அரசு, கம்பன் இலக்கிய கழக தலைவர் சடகோபன், முன்னாள் பதிவாளர் சிதம்பர பாண்டியன், செந்தில் நாயகம், சதக்கத்துல்லா அப்பா கல்லூரி பேராசிரியர் மகாதேவன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், வரலாற்று ஆய்வாளர் திவான், தமிழ்சங்க பிரமுகர் காஜா மைதீன், மித்ரா வள்ளி மணாளன், ராஜகோபால், தியாகி விஸ்வநாத தாஸ் தேசிய பேரவை தலைவர் முத்துராஜ், பொருநை இலக்கிய வட்ட புரவலர் தளவாய் ராமசாமி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். எழுத்தாளர் காமராஜ், நன்றி கூறினார். வண்ணார்பேட்டையில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஐ.என்.டி.யூ.சி., மாநில செயலர் ஆவுடையப்பன், தலைமை வகித்தார். செயலர் சுடலைமுத்து, கவுன்சிலர் உமாபதி சிவன், முன்னிலை வகித்தனர். தமிழ் முழக்கப் பேரவை அமைப்பாளர், நல்லாசிரியர் செல்லப்பா அறிமுக உரையில், தமிழுக்கு, திருநெல்வேலியில் பிறந்தவர்களின் பங்களிப்பு குறித்தும், தமிழ் முழக்கப் பேரவையின் தேவை குறித்தும் பேசினார்.ழ் முழக்கப்

திருநெல்வேலி தமிழ் :

திருநெல்வேலி தமிழ் :

தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும்திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும்.[1] இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ், தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.

இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்த ூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ள து. திருநெல்வேலி நாட்டார்வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்து க்காட்டாக,


அண்ணாச்சி - பெரியோர்களை மரியாதையாக அழைப்பது

ஆச்சி : வயதான பெண்மணி - Elderly Women;. தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 'பாட்டி'யை ஆச்சி என்று அழைப்பார்கள். .

பைதா - சக்கரம் ( wheel; In maths (English) pie x Dia(meter) is circumference!! )

கொண்டி - தாழ்ப்பாள்

பைய - மெதுவாக

சாரம் - லுங்கி

கோட்டி - மனநிலை சரியில்லாதவர்.

வளவு - முடுக்கு,சந்து

வேசடை - தொந்தரவு

சிறை - தொந்தரவு

சேக்காளி - நண்பன்

தொரவா - சாவி

மச்சி - மாடி

கொடை - திருவிழா

கசம் - ஆழமான பகுதி

ஆக்கங்கெட்டது - not constructive (a bad omen)

துஷ்டி - எழவு (funeral)

சவுட்டு - குறைந்த

கிடா - பெரிய ஆடு (male)

செத்த நேரம் - கொஞ்ச நேரம்

குறுக்க சாய்த்தல் - படுத்தல்

பூடம் - பலி பீடம்

அந்தானி - அப்பொழுது

வாரியல் - துடைப்பம்

கூவை - ஆந்தை an owl (bird of bad omen)

இடும்பு - திமிறு (arrogance)

சீக்கு - நோய்

சீனி - சர்க்கரை (Sugar)

ஒரு மரக்கா வெதப்பாடு - சுமார் 8 செண்ட் நிலம்

நொம்பலம் - வலி

கொட்டாரம் - அரண்மனை

திட்டு - மேடு

சிரிப்பாணி - சிரிப்பு

ிரியாவரம் - குசும்புத்தனம்

பாட்டம் - குத்தகை

பொறத்தால - பின்னாலே

மாப்பு - மன்னிப்பு

ராத்தல் - அரை கிலோ

சோலி – வேலை

சங்கு – கழுத்து (சங்க அறுதுருவேன்)

செவி – காது

மண்டை – தலை

செவிடு – கன்னம்

சாவி – மணியில்லாத நெல்,பதர்

மூடு – மரத்து அடி

குறுக்கு – முதுகு

வெக்க - சூடு, அனல் காற்று

வேக்காடு - வியர்வை.


credits: Mani Kandan Giri



வெள்ளி, 8 மார்ச், 2013

வியாழன், 7 மார்ச், 2013

சொல்லாமலே




சொல்லாமலே

படியில் அமர்ந்தால்
ரித்திரம் வருமென்றாய்
தலைக்கு மேல்
தனமிருந்தாலும்
தலையணை மீதமராதென்றாய்
அரிசி தின்றால்
மண நாளன்று
மழை கொட்டுமென்றாய்
கிளம்பும் போது
நிலையில்
தலை தட்டினால்
செம்புத் தண்ணீரருந்தி
ஒருவிநாடி
அமர்ந்து செல்லென்றாய்
வரைபடத்தை
வைத்துக்கொண்டு
வானிலை அறிக்கை
வாசிக்கிற அந்த
வானிலை நிலைய
அதிகாரியைப்போல. . .
வரலாம்
வராமலும் போகலாம்
எதுவும்
நடக்கலாம்
நடக்காமலும் போகலாம்
என்ற உண்மையை மட்டும்
ஏனெனக்குச்
சொல்லாமலேயே
வளர்த்தாய் அம்மா?

- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்



பழமொழி



எதுவும் தெரியாத

மக்கென்று பரிகசித்தாய்

கற்கத் துணிந்தேன்

மெத்தப் படித்த திமிரென்றாய்

மெல்ல அழுததோடு

அமைதி காத்தேன்

அமைதியும் ஒரு வகை

அகம் பாவம் தானென்றாய்

ஊமையாய் உலவினேன்

ஊமை ஊரைக் கெடுக்கும்

பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும், என்று

பழமொழி கொண்டு

பலமாகத் தாக்கினாய்

நீ குற்றம் சொல்வதிலேயே

குறியாயிருப்பவன் என்பதால்

இப்போதெல்லாம்

சும்மாயிருத்தலே

சுகமென்றிருக்கிறேன்

மூளையைக் கூர்தீட்டி

அதற்கொரு பழமொழியை

இதற்குள் தேடியிருப்பாயே!

சொல்லித் தொலை

என்ன செய்ய?

கேட்டுத் தொலைக்கிறேன்.



- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.