வியாழன், 7 மார்ச், 2013

சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்கள்



பழமொழி



எதுவும் தெரியாத

மக்கென்று பரிகசித்தாய்

கற்கத் துணிந்தேன்

மெத்தப் படித்த திமிரென்றாய்

மெல்ல அழுததோடு

அமைதி காத்தேன்

அமைதியும் ஒரு வகை

அகம் பாவம் தானென்றாய்

ஊமையாய் உலவினேன்

ஊமை ஊரைக் கெடுக்கும்

பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும், என்று

பழமொழி கொண்டு

பலமாகத் தாக்கினாய்

நீ குற்றம் சொல்வதிலேயே

குறியாயிருப்பவன் என்பதால்

இப்போதெல்லாம்

சும்மாயிருத்தலே

சுகமென்றிருக்கிறேன்

மூளையைக் கூர்தீட்டி

அதற்கொரு பழமொழியை

இதற்குள் தேடியிருப்பாயே!

சொல்லித் தொலை

என்ன செய்ய?

கேட்டுத் தொலைக்கிறேன்.



- சவுந்தர மகாதேவன், திருநெல்வேலி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக