வானொலி கேட்கும் பழக்கத்தை அப்பாதான் ஆரம்பித்து
வைத்தார்.
டெல்லி செட்டில் வானொலி கேட்காமல் அன்றும் இன்றும் என்றும் அவரால்
ஒருநாளின் காலையை அவரால் தொடங்கமுடியாது.
வந்தேமாதரம் போடும்போதே அப்பா நெல்லை
வானொலியைக் கேட்க ஆயத்தமாகி விடுவார்.
சூரியன் உதித்தும் உதிக்காமலும் இருக்கும்
அந்த கருக்கலோடு இயைந்த அந்தக் காலைவேளை வானொலியின் மங்கலஇசை கேட்கும்போது
கொஞ்சம்கொஞ்சமாய் பிரகாசமாவதாய் தோன்றும்.
நாகூர் அனிபாவின் “இறைவனிடம் கையேந்துங்கள்..”
பாடல்,
பி.சுசிலாவின் “தாமரைப்பூவில் அமர்ந்தவளே..”பாடல்,”
கேளுங்கள் கொடுக்கப்படும்..”பாடல்,இளையராஜாவின்
“ஜனனி ஜனனி”பாடல்
என்று காதுகள் வழியே கனிவைப் பிழிந்துஊற்றிட நெல்லை வானொலியால்
முடிந்திருகிறது.
தெளிவான அழுத்தமான தமிழ்உச்சரிப்பை நான்
கற்றுக்கொண்டது வானோலியில்தான்.
தென்கச்சியாரின் இன்று ஒருதகவல்,இரவின் இனிமையில்
தவழும் இந்துதானிஇசை
,எம்.எஸ்.அம்மாவின் குறையொன்றும் இல்லை பாடல்,வாரியார்
சுவாமிகளின் ஆன்மீகச் சொற்பொழிவுகள்,
ஏற்ற இறக்கத்தொடு கமபராமாயணம் பேசிய புலவர்
கீரன் குரல் என்று குரலில் குயிலைக் கொண்டுவந்த நூற்றுக்கணக்கான தொண்டைகளுக்கு என்
காதுகளைத் தந்துள்ளேன்.
செய்திகள் வாசிப்பது சரோஜ்நாராயண்சுவாமி என்று
டெல்லி செய்தியறிக்கை தரும் அந்தக் காந்தக்குரலுக்காகக் காலை ஏழுமணியிலிருந்தே
வானொலிப்பெட்டியின் முன் தவம் கிடந்த நாட்கள் உண்டு.
ட்ரங்குபெட்டிமாதிரி இருந்த
அந்த மிகப்பழைய வானொலியை மூன்று வயதில் பார்த்து பிரமித்திருக்கிரேன்.
கச்சேரி கேட்பதற்காக
சித்தப்பா அதை அரைமணிநேரம் முன்பே இயக்கி ஆயத்தமாக இருப்பார்.
வலதுபக்கம் கப்சோல்
மாத்திரை மாதிரி இருக்கும் குட்டிபல்பு எரிவதைப் பார்க்க அவ்வளவு மகிழ்ச்சி.
துணிகாயப்போடும்
கம்பிமாதிரி நீண்ட ஏரியல் இருக்கும்.அதில் பாடல் கேட்டது இன்னும் காதுகளில்
வழிகிறது.
சமீபத்தில் மனோன்மணியம் பல்கலைக்கழகத்தின்
பண்பலை வானொலியான ‘ஞானவாணி’யின் சர்வதேச வானொலிதினவிழா சிறப்புநேரலை
நிகழ்ச்சிக்காகப் பல்கலைக்கழகம் சென்றிருந்தேன்.
ஒருமணிநேரம் நேயர்களோடு
பேசிக்கொண்டேருந்தேன்
.வெளியே சீனதேசத்தின் தமிழ்வானொலி அறிவிப்பாளர்கள்
வந்திருப்பதாக பேராசிரியர் ஜெய்சக்திவேல் தெரிவித்தார்.
ஒளிபரப்பகத்திற்கு இருவரும்
வந்தார்கள்.
‘அய்யா வணக்கம்..நாங்கள் சீனவானொலியின் தமிழ்அறிவிப்பாளர்கள் எங்கள்
பெயர்..என்று ஏதோ சீனமொழிப்பெயரைச்சொல்லித் தமிழின் மீது கொண்ட தணியாத் தாகத்தின்
காரணமாக எங்கள் பெயரை இலக்கியா என்றும் ஓவியா என்றும் தமிழில்
மாற்றிகொண்டோம்.
தினமும் தூய தமிழில் நிகழ்ச்சிகள் வழங்குகிறோம்.பேச்சுத்தமிழ்
கற்பதற்காக பாண்டிச்சேரி மொழியியல் அமைப்பில் தமிழ் பயின்று கொண்டிருக்கிறோம்
என்றார்கள்
..தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவிக்கொண்டிருகிறது வானொலிமூலமாக..
சௌந்தர மகாதேவன்,திருநெல்வேலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக