புதுடெல்லி ஐ.டி.ஐ அமைப்பும்
பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் கணினித் துறையும் இணைந்து 21.3.14 மற்றும்
22.3.14 ஆகிய இருதினங்கள் தேசியக்கருத்தரங்கத்தினை நடத்தின.
இணையத்தில் நடைபெறும் திருட்டைத் தடுக்கும் முறைகள் குறித்த தேசியக்
கருத்தரங்கினை கல்லூரிமுதல்வர் டாக்டர் மு.முகமது சாதிக் தலைமையேற்றுத்
தொடங்கிவைத்தார்.
கல்லூரிக் கணினித்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.சாகுல் ஹமீது
வரவேற்றுப் பேசினார்.முதுநிலைக் கணினித்துறைத் தலைவர் பேராசிரியை எஸ்.சாஜுன் நிஷா கருத்தரங்க
அறிமுக உரையாற்றினார்.
அரசுதவி பெறா வகுப்புகளின் இயக்குநர் டாக்டர் பி.நவராஜ்
சந்திரசேகரன் வாழ்த்திப்பேசினார்.
புதுடெல்லி ஐ.டி.ஐ அமைப்பின் கணினித்துறை
பாதுகாப்பு ஆய்வறிஞர் அனந்தரப்பு சைதன்ய கிருஷ்ணா இணையத்தில் நடைபெறும் திருட்டைத்
தடுக்கும் முறைகள் குறித்து ஆய்வுரை வழங்கினார்.
இருநாள் மாணவர்களுக்குப்
பயிற்சியளித்தார்.அரசுதவி பெறாக் கணினி அறிவியல் துறையின் உதவிப் பேராசிரியர்
கே.எம்.முகமது ரியாஜுதீன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார்.
தேசியக்கருத்தரங்கத்தினை
கல்லூரியின் இளநிலை மற்றும் முதுகணினி அறிவியல் துறைகள் சிறப்பாகச் செய்திருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக