திங்கள், 14 ஏப்ரல், 2014

பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் பேரவைப் பொதுக்குழுக்கூட்டம்




பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் பேரவைப் பொதுக்குழுக்கூட்டம் 14.4.14 அன்று காலை 11.30 மணிக்குக் கல்லூரிஉரையரங்கில் நடைபெற்றது.

வணிகவியல் பேராசிரியர் பி.ஏ.அப்துல் கரீம் வரவேற்றுப் பேசினார்.
 
கல்லூரி ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.ஷெய்க் அப்துல் காதர் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

 ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர் முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினாராக திருநெல்வேலி சூரியன் பண்பலை அறிவிப்பாளர் எஸ்.பிச்சுமணி பங்கேற்று “மாணவர்களை உருவாக்குவதில் பெற்றோரும் ஆசிரியரும்”எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
 
கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக் ஆண்டுநிகழ்வுகள் குறித்த விளக்க உரையாற்றினார்.கணக்கறிக்கையை வணிகவியல் பேராசிரியர் முனைவர் கே.சுப்ரமணியன் வழங்கினார்.

செயற்குழுக்கூட்ட நிகழ்வுகள் குறித்து பேராசிரியர் பி.ஏ.அப்துல் கரீம் பேசினார்.தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன் நிகழ்ச்சியைத் தொகுத்தளித்தார். 

 வணிகவியல் பேராசிரியர் முனைவர்அ.ஹாமில் நன்றி கூறினார்.பெற்றோர்,ஆசிரியர் தம் கருத்துக்கள்,ஆலோசனைகளை விளக்கிப் பேசினர்.


படத்தில்: பாளை.சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் பேரவைப் பொதுக்குழுக்கூட்டத்தில் பேராசிரியர் பேராசிரியர் பி.ஏ.அப்துல் கரீம் பேசுகிறார்.அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் எம்.முகம்மது சாதிக், கல்லூரி ஆட்சிக்குழுப் பொருளாளர் அல்ஹாஜ் ஹெச்.எம்.ஷெய்க் அப்துல் காதர், ஆட்சிக்குழு உறுப்பினர் அல்ஹாஜ் எம்.கே.எம்.முகமது நாசர் ஆகியோர்.
செய்தி:முனைவர் ச.மகாதேவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக