வெள்ளி, 4 ஏப்ரல், 2014

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மாணவர் பேரவை நிறைவு விழா





மாணவர்களின் கவித்திறமையை வெளியே கொண்டுவரும்பொருட்டு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் 5.4.2014 அன்று காலை 10 மணிக்குக் கல்லூரிக் கலையரங்கில் சங்கமம்-2014 இளைஞர் கலைவிழாவை மாணவர் பேரவையும் இளைஞர் நலத்துறையும் இணைந்து கொண்டாடுகின்றன.

சிறப்புவிருந்தினராக திருநெல்வேலி,மதிதா இந்துக் கல்லூரி முதல்வர் டாக்டர் பி.சின்னத்தம்பி கலந்துகொண்டு “ஆறாம் விரல்” எனும் தலைப்பில் தமிழ்த்துறையும் மாணவர்பேரவையும் இணைந்து உருவாக்கியுள்ள கவிதைத்தொகுப்பை வெளியிடுகிறார்.

 சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.முஹம்மது சாதிக் விழாவுக்குத் தலைமையேற்றுத் தலைமையுரை ஆற்றுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக