பொருளாதாரத்தில் பின்தங்கிய
இளம்நீரழிவு நோயாளிகளுக்கு இலவசமருந்து உதவி

நெல்லையைப்
பூர்வீகமாக கொண்ட பீமா ஜான் என்கிற பெண்மணி தற்பொழுது ஆஸ்திரேலியாவில்
குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவரும் இளம் வயதிலேயே நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுத் துன்பத்திற்குள்ளானவர்.பின் அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்து இன்று ஒரு மருத்துவ நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே
இந்தியாவின் சில பகுதிகளிலும் ஆஸ்திரேலியாவிலும் நீரிழிவு நோய்க்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.உலக அளவில் முன்னூறுபேர் இந்த
அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர்.
தன் சொந்த ஊரான நெல்லையில் இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும், அதன் மூலம் இளம் நீரிழிவு நோயாளிகளைக் கண்டறிந்து அவர்களை ஒன்றிணைத்துத் தேவையான ஆலோசனைகள்
மற்றும் அவர்களையும் இயல்பு
வாழ்க்கைக்குக் கொண்டு வரும் வகையில் ஆற்றுப்படுத்துதல் செய்வதும் மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும்
நோயாளிகளுக்குத் தன்னார்வ நண்பர்களின் உதவியோடு தேவையான மருந்துப்பொருட்கள் தந்து
அவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவவும் எண்ணியுள்ளார். இதன் தொடக்க விழா சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் சதக்கத் கிராம மேம்பாட்டுத் திட்டம் எனும் எஸ்.ஓ.பி
அமைப்போடு இணைந்து வரும் ஏப்ரல் 13 ஞாயிறு அன்று காலை 10 மணிக்கு நெல்லையில் நடத்தப்படுகிறது.கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகம்மது
சாதிக் தலைமையில் கல்லூரி உரையரங்கில் நடைபெற உள்ளது.கோவில்பட்டியைச் சார்ந்த
சர்க்கரைநோய் நிபுணர் டாக்டர் மரியசெல்வம்,திருநெல்வேலி மருத்துவர் டாக்டர்
அபுபக்கர்,பிரபல தமிழ்ப் பேராசிரியர் சரஸ்வதிராமநாதன் ஆகியோர்பங்கேற்று நீரழிவு
நோயிலிருந்து எப்படி மீள்வது?என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்.சட்டக் கல்லூரி
மாணவர்கள் விழிப்புணர்வு நாடகம் நடத்துகிறார்கள்.திருநெல்வேலியைச் சார்ந்த சமூக
ஆர்வலர் வெங்கட்ராமன் எழுதி இசையமைத்துள்ள நீரழிவு விழிப்புணர்வுப் பாடல் விழாவில்
வெளியிடப்படுகிறது.நேயர்களின் சந்தேகங்களுக்கு மருத்துவர்கள் பதில்
அளிக்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய இளம்நீரழிவு நோயாளிகளுக்கு
இலவசமருந்து உதவிசெய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.கட்டணம் ஏதும்செலுத்தத்
தேவையில்லை.விழாவைத் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் ச.மகாதேவன்,பேராசிரியர் சேக்
தம்பி ஆகியோர்.ஒருங்கிணைத்து நடத்துகிறார்.முகாமில் பங்கேற்க விரும்புவோர்
திரு.வெங்கட்ராமன் அவர்களை செல்பேசிமூலம் தொடர்பு கொள்ளலாம்(9944452403)
cell number:9944452403
sir, ur post is very fine.
பதிலளிநீக்கு