திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத் தமிழியியல் துறை நடத்திய மகாகவி பாரதி,பாவேந்தர் பாரதிதாசன்
அறக்கட்டளை வினாடிவினாப் போட்டியில் நெல்லை,குமரி,தூத்துக்குடி மாவட்டங்களைச்
சார்ந்த 31 கல்லூரிகள் பங்கேற்றன.
மகாகவி பாரதி,பாவேந்தர் பாரதிதாசன் தொடர்பான
வினாக்களோடு பத்துசுற்றுக்களில் போட்டி நடைபெற்றது.
91புள்ளிகள் பெற்று
பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி இளைஞர் நலத்துறை மாணவி செ. செ.மாலதி,மாணவர்
மாரிமுத்து ஆகியோர் பல்கலைக்கழக முதலிடம் பெற்றுப் பெருமை
சேர்த்துள்ளனர்.
அவர்களுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்
முனைவர் ஏ.கே.குமரகுரு ரூ.2000 பரிசினைப்
பல்கலைக்கழக விழாவில் வழங்கிப் பாராட்டினார்.
கல்லுரியில் நடந்தவிழாவில்
அவ்விருவருக்கும் பல்கலைக்கழகப் பதிவாளர் டாக்டர் தமிழ்செல்வம், கல்லூரி முதல்வர்
டாக்டர் எம்.முஹம்மது சாதிக் ஆகியோர் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக