சமீபகாலமாய்
சுக துக்கங்கள் யாவற்றையும்
சுவரொட்டிகளின் வழியே
சொல்லத் தொடங்கி விட்டோம்...
இரட்டைக் கண்களில்
கண்ணீர்த் துளிகள்
வழியும் புள்ளியில்
கறுப்பு மலர்களின் பின்னணியில்
சுவரொட்டிகளில் அவ்வப்போது
கண்ணீர் அஞ்சலிகள்
மழையில் நனைந்து
வெயிலில் வெளுத்து
ஆறு மாதங்களுக்கு முந்தைய
அஞ்சலிச் சுவரொட்டிகளையும்
அவ்வப்போது காண்கிறேன்
அதுசரி...
என் கண்ணீரையும்
என் அஞ்சலியையும்
ஊருக்கு நான் ஏன்
பிரகடனப்படுத்த வேண்டும்?தனிமைத் தவத்தின்
வருத்த வரம்தானே
கண்ணீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக