ஞாயிறு, 16 மார்ச், 2014

திருநெல்வேலி,சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அல்ஹாஜ் L.K.S.முகமது மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளை சொற்பொழிவு



இஸ்லாமியச் சட்டங்கள் குறித்த அறக்கட்டளைச் சொற்பொழிவினை ஆண்டுதோறும் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் அல்ஹாஜ் L.K.S.முகமது மீரான் முகைதீன் தரகனார் அறக்கட்டளையின் மூலம் கல்லூரி நடத்திவருகிறது.

கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ச.மகாதேவன் வரவேற்றுப் பேசினார். 

 கல்லூரித் தாளாளர் அல்ஹாஜ் த.இ.செ.பத்ஹூர் ரப்பானி அவர்கள் தலைமைஉரை ஆற்றினார்.

 சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.வள்ளிநாயகம் ‘இஸ்லாமும் தமிழும் ‘ என்ற தலைப்பில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கல்லூரி முதல்வர் முனைவர் மு.முகமது சாதிக் வாழ்த்திப் பேசினார்.மாண்புமிகு நீதியரசர் திரு. R.S.ராமநாதன் அவர்கள்,சென்னை உயர்நீதிமன்றம். நாள்: 15.3.2014 காலை 10 மணியளவில் “இளம்சிறார் நீதி(குழந்தைகள் மற்றும் பராமரிப்பு பாதுகாப்பு) சட்டமும் இஸ்லாமும்”எனும் பொருளில் சிறப்புரையாற்றினார்கள்..

திருக்குர்ஆன் குறித்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் வழிமுறைகள் குறித்தும் இஸ்லாமியச் சட்டம் குறித்தும் நீதியரசர் R.S.ராமநாதன் அவர்கள் அழகான சொற்களோடு  சிறப்புரையாற்றியது சிறப்பாய் இருந்தது.

உச்சநீதிமன்றத்தீர்ப்பினை மேற்கோளாகக் காட்டிப் பேசினார்.ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பொறியாளர் திரு.L.K.M.A.முகம்மது நவாப் ஹுசைன் ,அல்ஹாஜ் கே.ஏ.மீரான் மைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியின் துணைத்தலைவர் திரு. L.K.S. மீரான் முகைதீன் நெகிழ்வான நன்றியுரை ஆற்றினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக