காற்றின்
காதுகளில்…
யாருக்குத்
தெரியும்?
இழுத்துக் கொண்டு
கிடக்கிறவரின்
இறுதி நினைவு
இன்னதென்று!
யாருக்குத்
தெரியும்?
பூர்வீக விட்டை
வறுமையை எதிர்கொள்ள
விற்றுவிட்டுப்
போகிறவனின்
இறுதிப்
பார்வையின் பொருள்
இப்படி…
யாருக்கும்
தெரியாச் சொற்கள்
உண்டு கோடானு கோடி
காற்றின் காதுகள்
மட்டுமே அறியும்
காலமானவனின்
கடைசி வார்த்தைகளை…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக