புதன், 6 பிப்ரவரி, 2013

எலிகளானோம் நாம்


   எலிகளானோம் நாம் 
உன் உயிர்  பிரியும் இறுதிநாளுக்கு
முந்தைய நாள் வரை நீ சகஜமாகத்தானிருந்தாய்
மரணத்தின் விடியல் என்றறியாமல் துயிலெழுந்து
பல் துலக்கிப் பலகாரம் உண்டு 
பாளை பஸ்நிலையம் ஓடி
பேருந்து  பிடித்துப் பதறிப் பணி செய்து
வண்ணாரப்பேட்டை  பேராச்சி அம்மனைத் தரிசித்து
மகனைப்  பற்றிக் கவலைப்பட்டு
மகளறியாமல்  அவள் செல்பேசிய எண் பார்த்து
ஆயாசத்தோடு  படுக்கப் போகும் வரை 
நீ அறியாத உன் மரணம் 
உன் காலுக்குக்கீழே தான் பரவிக்கொண்டிருந்தது
வாளியிலிருந்து  சிந்திய தண்ணீர் 
தரையில் பரவுவதைப்  போல் 
அடுக்களை  இருட்டிலிருக்கும் 
பூனையைக்  கவனிக்காமல் 
அதன் எதிரில்  உலவும் எலிகளானோம் நாம்  
                                                - முனைவர். ச. மகாதேவன்  www.mahatamil.com  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக