எழுதுகிறேன்
விபத்தில் சிக்கி யார் உயிருக்குப் போராடினாலும்
தன்னுயிர் குறித்துக் கவலைப்படாமல்
கடிது விரைகிறார் காப்புந்து ஒட்டுநர்
பெயர் தெரியாப் பெண்ணின்
பிரசவ அறுவைக்கும் ரத்தம் தர
ஓடுகிறான் உடன் பிறவாச் சோதரன்
தான் செத்த பிறகு
கண்களை எடுத்துக்கொள்ள
அனுமதிக்கடிதம் தருகிறார்
செவல்குளம் சுப்பராயதாத்தா
இறந்தபின் எரியூட்ட வேண்டாமென
தன்னுடலைத் திருநெல்வேலி
மருத்துவக் கல்லூரிக்கு எழுதிவைக்கிறார்
“பாலம்“ கல்யாண சுந்தரம் அய்யா
அவர்கள் செய்கிற யாவற்றையும்
சிலாகித்துக் கவிதை
எழுதிக் கொண்டிருக்கிறேன் நான்.
- முனைவர். ச. மகாதேவன் www.mahatamil.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக